Sri Narasimaa Jeyanti Festival

(கடன் தீர்க்கும் யாகத்துடன் நோய் தீர்க்கும் ஹோமங்கள்)

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ கூர்ம அவதாரத்தின்மேல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் அருள்பாவிக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு இன்று 28.04.2018 சனிக்கிழமை ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், மஹா அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

காலை 7.00 மணிக்கு கோ பூஜை, பகவத் பிரார்த்தனை, புண்யாஹ வாசனம், வேதபாராயணம், 108 வகையான மூலிகைகளால் மூலமந்த்ர ஹோமம், ஸ்வாதி ந்க்ஷத்திர ஹோமம், ஸ்ரீ மண்யு சூக்த ஹோமம், ஸ்ரீ புருஷ சூக்த ஹோமம், ஸ்ரீ விஷ்ணு சூக்த ஹோமம், ஸ்ரீ சூக்த ஹோமம், மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை, மூலவர் ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்பு சாறு, அரிசி மாவு, போன்ற 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த யாகத்தில் ருண ரோக நிவர்த்திக்கான பழங்கள், புஷ்பங்கள், வாசனாதி திரவியங்கள், மூலிகைகள் சேர்க்கப்பட்டது.

பக்தர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு ருண ரோக நிவர்த்திக்கும், அஷ்ட ஐஸ்வர்யம் பெற்று ஆரோக்யத்துடன் ஆனந்தமாக வாழவும் பிரார்த்தனை செய்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images