இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் சென்ற வருடம் 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னம் கூடிய ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ சொர்ண சனீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இப்பிரதிஷ்டையை முன்னிட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலுள்ள பிரசித்தி பெற்ற சனி பகவான் ஆலயங்களுக்கு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் நேரில் சென்று சனி பகவான் யந்திரத்தை வைத்து சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்து வந்தார்.
ஒரு மனிதனை அவரவர் பூர்வபுண்ணியத்திற்கு தகுந்தவாறு வாழ்க்கை பாதையை கொண்டு செல்பவர்கள் நவக்கிரகங்களே. அந்த நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனிபகவான். இவரது பெயர்ச்சியின் அடிப்படை மட்டுமின்றி பாவ புண்ணியங்களை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் வாழ்க்கையில் நீதிமான் போல செயல்பட்டு அதற்கேற்ற பலன்களை தருபவர் இவர். இவரது பார்வையில் சனிபகவான் உட்பட யாரும் தப்ப முடியாது. சனி பகவான் ஒவ்வொருவரின் ஜாதகத்தில் ஆயுள்காரனாக விளங்குவதால் உலகின் சகல ஜீவராசிகளுக்கும் ஆயுளை தீர்மானிக்கும் ஆற்றல் பெற்றவர் இவரே. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சனீஸ்வர பகவான் பொதுவாக கோயில்களில் நவக்கிரகங்களுடன் சேர்ந்திரிப்பார். ஒரு சில பரிகாரக் கோயில்களில் தனி சன்னதிகளில் மூல மூர்த்தியாக காட்சி தருகிறார். அதைப் போலவே வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் 13 படிகள் கொண்டு பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வர பகவான் தனி ஆலயம் அமைத்து கொண்டு பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். சனி பகவான் யந்திரத்தை சொர்ண சனீஸ்வர பகவானின் ஆதார பீடத்தில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால். பல்வேறு க்ஷேத்திரங்களில் உள்ள இறைவனின் அனுக்கிரகத்தை பெற்று தன்வந்திரி க்ஷேத்திரத்தில் சொர்ண சனிஸ்வரன் அமைந்துள்ளதால் இப்பீடத்திற்கு 27 நக்ஷத்திரக்காரர்களும் வந்து பிரார்த்தனை செய்யும் சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகவும், ஆரோக்ய, ஐஸ்வர்ய பீடமாகவும் அமைந்துள்ளது.
தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான். இவரை வணங்குவதால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தம சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, மற்றும் சனி தசை, சனி புக்தி ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்கவும், மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் தீரவும், திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சனி சாந்தி ஹோமத்தில் பக்தர்கள் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு பலன் பெற்று வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ பாதாள சொர்ண சனிஸ்வரருக்கு நாளை 14.06.2020 ஞாயிற்றுக்கிழமை முதலாம் ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மகா மிருத்ஞசய ஹோமமும், சனி சாந்தி ஹோமமும், 1008 சங்காபிஷேகமும் நடைபெறுகிறது. ஆலய அர்ச்சர்களை கொண்டு நடைபெறும் மேற்கண்ட பூஜைகளில் தமிழக அரசின் பொது ஊரடங்கு உத்திரவு முன்னிட்டு பொது மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.