Sri Ramanujar Jayanthi at Danvantri Peedam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நாளை 01. 05.2017திங்கள் கிழமை காலை 10.00 மணிமுதல் 1.00 மணி வரை ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி,தொழிலாளர் தினம்,மற்றும் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.

ஸ்ரீ ராமானுஜரின் 1000 வது ஜென்ம தினத்தை முன்னிட்டு குரு அருள் கிடைக்கவும் குடும்பம் தழைக்கவும் நோயின்றி மக்கள் நலமுடன் வாழவும் 108 மூலிகைகளை கொண்டு சிறப்பு தன்வந்திரி ஹோமம் நடைபெற உள்ளது.

உலக தொழிலாளர்களின் உடல் நலம், மன நலம் கருதியும், அவர்களது குடும்பம் ஷேமமாக இருக்க வேண்டி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முலவர் தன்வந்திரிக்கு தேன் அபிஷேகம் நடைபெற உள்ளது. வளர் பிறை சஷ்டி தினத்தை முன்னிட்டு ஸ்ரீ முருகப்பெருமான் அருளால் குழந்தை இல்லாத தம்பதியருக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பத்தல் மகிழ்ச்சி ஏற்படவும் குடும்ப வாரிசு எற்படவும் வம்ச விருத்தி அடையவும் ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு தைலாபிஷேகம் நடைபெற்று சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. அவ்வமையம் ஸ்ரீ நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணைய் சாற்றி விரைவில் குழந்தை பாக்கியம் கிடைத்து குடும்பம் மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க சிறப்புகூட்டுப்பிரார்த்தனையும் நடைபெற உள்ளது.

தொழிலாளர்கள் இந்நாட்டின் முதுகெலும்பாவார்கள். ஏனென்றால் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் கண்டு உலகம் செழித்தோங்க வேண்டுமானால் தொழிலாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். எனவே அவர்கள் நல்ல ஆரோக்யத்துடன் வாழ வேண்டும் என்பதாற்காக சிறப்பு பூஜைகளை ஸ்ரீ ராமானுஜரின் 1000 வதுஜெயந்தி விழாவை முப்பெரும் விழாவாக நடைபெற உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images