வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 05.10.2017 வியாழக்கிழமை பௌர்ணமி அன்று உலக நலன் கருதி ஸ்ரீ வல்லலார் அவர்களின் 195 ஆவது அவதார தின விழாவும் உலக ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.
" அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி,
தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி "
என்ற வாசகத்தை அருளியவர் ஸ்ரீ வள்ளளார் பெருமான். புலால் உண்ணாமையையும், ஜோதி வழிபாட்டினையும் வழியுருத்தி வந்த வடலூர் வள்ளளார் என்ற இராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார். இவர் சுத்த சன்மார்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளை பரப்பி வந்தார். Tamil version