வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று 17.07.2018 செவ்வாய்கிழமை ஆஷாட நவராத்திரி மற்றும் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு நாடு வளம் பெற, நானிலம் செழிக்க ஸ்ரீ வராஹி ஹோமம் நடைபெற்றது.
உலகிற்கே தாயாக விளங்குகின்ற ஸ்ரீ லலிதா திரிபுர சுந்தரியின் அங்குசத்தில் இருந்து தோன்றி ஸ்ரீ லலிதாவின் மெய்க் காப்பாளினியாகவும் நால்வகை படைத்தளபதியாகவும் ஸ்ரீபுரத்தை ரக்ஷிப்பவளாகவும் விளங்குகின்ற அன்னை ஸ்ரீ வராஹி பன்றி முகத்துடன் காட்சி தருபவள் பாரத நாட்டினை எதிரிகளிடமிருந்து காக்க வராகியை நாம் அவசியம் வழிபட வேண்டும். நம் நாட்டினை விவசாயத்தில் முதலிடம் பிடிக்கவும், செய்வினை, கண்திருஷ்டி, பயம் நீங்கவும், அன்னை வராஹியின் அருள் கிடைக்க வேண்டி ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட ஹோமம் நடைபெற்றது.
இந்த யாகத்தில் புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் சேர்கப்பட்டது. பங்கேற்ற பக்தர்களுக்கு பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.