Sri Vasthu Homam

வாஸ்து புருஷன் – வாஸ்து பகவான் :

அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது

வாஸ்து தோஷத்தினால் ஏற்படும் விளைவுகள் :

வாஸ்து குறைபாடு காரணமாக குடும்பத்தின் சண்டை, வாரிசுகளை திட்டுவது, அடிப்பது, சாதாரண விஷயங்களுக்கும் தம்பதிகளுக்குள் சண்டை மற்றும் சமைத்த உணவை நிம்மதியாக சாப்பிட முடியாதது. சமையல் நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டில் சண்டை, சச்சரவுகள் துவங்கிவிடுவது. இதனால் கணவர் மற்றவரிடம் மனஸ்தாபம் ஏற்படுதல். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்ய குறைவு, பணம், நகை, உள்ளிட்ட பொருட்கள் களவு போதல். நவகிரகங்களின் ஆட்சி ஒருபுறம் நடந்தாலும், தங்கியுள்ள வீட்டின் வாஸ்து சாஸ்திரமும் மனிதனை ஆட்டுவிக்கும். எனவே வீடு நன்றாக வாஸ்துப்படி அமைத்தால்தான் சிறப்பாக இருக்கும். ஆகவே, வாஸ்து இல்லாத இடத்தில் ஜீவகாருண்யம் இருக்காது. வாஸ்து இல்லாவிட்டால் அங்கு ஜீவராசிகள் வாழ முடியாது. வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் துர்தேவதைகள், கெட்ட சக்திகள் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை.

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் அமைப்பு:

வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்து கொண்டிருக்கும் திருக்காட்சி இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப் பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மேற்கண்ட வாஸ்து தோஷங்கள் குறையவும் ஒரு பயனுள்ள முறையில் எதிர்மறை ஆற்றல் அகற்றுவதற்கும், புதிய கட்டிடங்கள் நிலைமைகளை மேம்படுத்தவும், வெற்றிகரமான வாழ்க்கை வாழவும், குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்தவும், பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், சுகாதார பிரச்சினைகள் குறைக்கவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வருகிற 27.07.2018 வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கும் அஷ்டதிக் பாலகர்களுக்கும், பஞ்ச பூதங்களுக்கும் அஷ்ட திரவிய அபிஷேகம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாஸ்து பகவானுக்கு தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை என விதவிதமான சாதங்கள், சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை போன்ற பூமிக்கடியில் விளையும் பொருட்களை நைவேத்யம் செய்து வாஸ்து ஹோம பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

தனக்கென ஒரு வீடு :

தனக்கென ஒரு வீடு, சிறிய தொழில், பெரிய தொழில் செய்வ்வோர்க்கும், வியாபாரம் செய்வ்வோர்க்கும் மற்றும் பலவகை நிறுவனங்களில் பணிபுரியோர்க்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கேற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவதும், தான் குடியிறுக்கும் வாடக வீட்டை விலைக்கு வந்தால் வாங்கி போடலாம் என்பதுவும் சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்குன் கேள்வியாக இருக்கும்.

மனை வீடு வாஸ்து :

''வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

வாஸ்து பிரசாதங்கள் :

ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று செல்கின்றனர்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images