வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 11.10.2016, செவ்வாய் கிழமை அன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டும், நவராத்திரி மற்றும் விஜய தசமியை முன்னிட்டும் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பு விஜயலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு திருவோண அபிஷேகமும், குழந்தைகளுக்கான அட்சராப்யாசமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆயுதம் என்பதன் உண்மையான பயன்.
உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம். ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணெய் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோம் விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஆயுத பூஜை நாள் அன்று வாழ்வில் மக்கள் அனைவரும் அனைத்து செயல்களிலும் வெற்றி பெற்று மகிழ்ச்சியுடன் வாழ அஷ்டலக்ஷ்மிகளில் ஒருவரான ஸ்ரீ விஜயலக்ஷ்மியின் அருள் வேண்டி ஸ்ரீ விஜயலக்ஷ்மி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமத்தில் எண்ணற்ற பழங்கள், பல வகையான புஷ்பங்கள், பட்டு பீதாம்பரங்கள் 100க்கு மேற்பட்ட மூலிகைகள் சேர்க்கப்பட உள்ளன. பக்தர்கள் மேற்கண்ட ஹோமத்தில் பங்கேற்று ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று நலமாய் வாழ அன்புடன் அழைக்கிறோம்.
தொடர்புக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version