வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஷஷ்டியை முன்னிட்டு வருகிற21.08.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சுப்ரமண்ய ஹோமம் என்கிற சத்ரு தோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. மேற்கண்ட ஹோமம் தீயவற்றிலிருந்தும், எதிரிகளின் தொல்லையிலிருந்தும் விடுபட கார்த்திகை குமரன் எனும் சுப்பிரமணிய ஸ்வாமியின் அருளாசி வேண்டி நடைபெறுகிறது.
தீமையிலிருந்து விலகி வாழ்வில் நல்ல பல நன்மைகளை பெறவும், மந்தநிலை அகலவும், பல்வேறு பயங்கள் நீங்கவும் இந்த ஹோமத்தில் பிரார்த்தனை நடைபெற உள்ளது.
சுப்ரமண்ய ஹோமம் எனும் சத்ருசம்ஹார ஹோமம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஹோமமாகும். இந்த ஹோமத்தின் மூலம் மக்களுக்கு ஏற்படும் எதிர்மறை தாக்ககங்களிலிருந்து விடுபடவும், நவ கிரகங்களின் தோஷங்களிலிருந்தும், முன்னோர்களின் சாபங்களிலிருந்தும், கர்மவினைகளிலிருந்தும் விடுபடவும், குடும்பத்தில் நல்லுறவு ஏற்படவும்,வாரிசுகள் உண்டாகவும், பல்வேறு கடன்களிலிருந்து விடுதலை பெறவும், மற்றும் ரத்த சம்பந்தமானநோய்களிலிருந்து நிவாரணம் பெறவும் நடைபெற உள்ளது.
அரசியல்வாதிகள், வியாபாரிகள், தொழில் போட்டியாளர்கள் நன்மை பெறவும், பில்லி, சூனியம், திருஷ்டிகளால் ஏற்படும் தொல்லைகள் விலகவும், எதிர்மறை சக்திகளிடமிருந்தும், நவ கிரகங்களின் தோஷங்கள் அகலவும் சுப்ரமண்ய ஹோமம் எனும் சத்ரு சம்ஹார ஹோமம் தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கார்த்திகை குமரனுக்கு நவகலச அபிஷேகமும், ஆறு வகையான புஷ்பங்களை கொண்டு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் இவ்வைபத்தில் பங்கு பெற்று ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளையும் பெற்று ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தத்துடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.