SUDHARSHANA JAYANTHI FESTIVAL - SPECIAL SUDHARSHANA HOMAM

SUDHARSHANA JAYANTHI SPECIAL SUDHARSHANA HOMAM ON 20TH JUNE 2021, SUNDAY @ DANVANTHRI AROGYA PEEDAM, WALAJAPET

With the Blessings of our beloved Guruji 'Yagnasri Kayilai Gnanaguru' Dr. Sri Muralidhara Swamigal, Founder, Sri Danvantri Arogya Peedam is organizing SUDHARSHANA JAYANTHI FESTIVAL for SPECIAL SUDHARSHANA HOMAM on 20TH JUNE 2021, SUNDAY from 09.00 AM to 12.00 Noon

Sudharshana Jayanthi, is the birthday of supreme divine Sudharshana Chakra (wheel or discus), the mighty weapon of Lord Vishnu. This powerful weapon is carried by the preserver and sustainer archetype, Lord Vishnu, as a solid shield of righteousness which can confront all negative forces that obstruct your growth and success.

SUDHARSHANA CHAKRA IN MYTHOLOGY

There are a lot of mythological references where Lord Vishnu uses Sudharshana chakra to behead demons. But, there are only a couple of mythologies around the creation or the birth of Sudharshana Chakra. One such story goes on to explain how Lord Shiva gifted Lord Vishnu with Sudharshana Chakra to kill demons after his severe penance towards him. Another story explains how Vishwakarma, the chief architect of the celestial beings, created the Sudharshana Chakra by cutting down the brilliance of the Sun and created Sudharshana Chakra using the parts of the Sun’s radiance.

LORD SUDHARASHANA WIPES OUT ENEMIES AND HEALS THE SOUL

Lord Sudarshan is none other than Lord Vishnu. He is called so because he wields the indestructible Sudarshan chakra. The word Sudarshan arises from two words ‘su’ which means auspicious and darshan which means vision. Chakra means a wheel that is in constant motion. The chakra was created by the combined power of the trinities Brahma, Vishnu and Shiva. According to Puranas, Lord Krishna and Arjun assisted Lord Agni in burning the Khandav forest. In return, he gifted Krishna with a discus and koumodaki mace. Other deities who wield the discus are Goddesses Narayani and Vaishnodevi.

BENEFITS OF SUDHARSHANA HOMAM

Sudarshana Jayanthi is dedicated to the Sudarshana Chakra of God Vishnu. The divine wheel is said to have appeared on this day and worshipping it is equal to worshipping the ten avatars of Lord Vishnu. The Vaishnava sects, followers of Maha Vishnu, observe the day as Shukla Paksha Ashada Dasami. The homa on this day empowers a person with positive vibrations and stops unexpected dangers and fears that hinder the path of progress. Your enemies are kept away and all worries and sufferings are eliminated. Lord Sudarsana uses his mighty weapon to grant everything that a devotee wants. The healing power of the chakra relieves one of all types of diseases. Sudarshana Homam is a Hindu ritual involving fire. Participating in Sudarshana Homam helps a person destroy negativity, gives him victory over the enemies, and protects against the evil eye. The homam grants purification and helps in restoring energies and health. 

சங்கடங்கள் தீர்த்து சுந்தர வாழ்வு தரும் ஸ்ரீ சுதர்சன ஹோமம்

சுதர்சன ஹோமத்தில் சங்கல்பம் செய்து கொண்டு சுதர்சன ஆழ்வாரை வழிபடுபவருக்கு அச்சங்கள் விலகும், ஞாபகம் சக்தி பெருகும், செல்வம் சேரும், உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவர், கண்ணுக்குத் புலப்படாத நோய்களுக்கு தீர்வு உண்டாகும், சகல பாவங்களும், தோஷங்களும் நீங்கி, தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும்.

சுதர்சன ஆழ்வார் எனும் சக்கரத்தாழ்வாரை வழிப்பட்டு சங்கடங்களையெல்லாம் தீர்த்து, வாழ்வில் சகல சந்தோஷங்களையும் செளபாக்கியங்களையும் பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

சுதர்சனர் என்றால் நல்ல வழியைக் காட்டி அருளுபவர் என்று பொருள். இனியவர் என்று அர்த்தம். திருமாளின் திருக்கரங்களில் ஆயுதமாகத் திகழ்பவர். சுதர்சனம் என்றால் சக்கரம் என்று அர்த்தம். இந்த சக்கரம், நல்வழி காட்டக்கூடியது. உலகை உய்விக்கக் கூடியது. மகாவிஷ்ணுவின் வலது திருக்கரத்தில் இருந்தபடி, இந்த உலகத்து ஜீவராசிகளையெல்லாம் வாழ்வதற்கு அருள் செய்யக்கூடிய வலிமை மிக்கது என்கிறது விஷ்ணு புராணம்.

பக்தர்களைக் காக்கின்ற கடமையும் பொறுப்பும் பகவானுக்கு உண்டு என்ற வகையில் சுதர்சன ஆழ்வார், எதிரிகளையும் தீயவர்களையும் துஷ்ட சக்திகளையும் அழித்து பக்தர்களை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை பக்தர்களளிடம் உண்டு எனலாம்.

சுதர்சன பெருமாளை புதன்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் அமாவாசை நாட்களிலும் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தந்தருளும். தமிழகத்தில் பெரும்பான்மையான பெருமாள் கோயில்களில், சக்கரத்தாழ்வாருக்கு தனிச்சந்நிதி உண்டு என்ற வகையில் தன்வந்திரி பீடத்தில் சுதர்சன ஆழ்வாருக்கு என்று தனிச்சந்நதி உண்டு.

சுதர்சனரை வழிபடுவதால் மனோபலம் பெருகும். எதிரிகள் தொல்லை அகலும், பயங்கள் விலகும், தடைகளை தகர்த்து வெற்றிபெறச் செய்பவர். மங்களங்கள் அனைத்தும் தந்தருள்வார்.

ஸ்ரீ சுதர்சனர் அனல் தெறிக்கும் கேசமும், மூன்று கண்களும் கொண்டு ருத்திர அம்சமாக விளங்குபவர். தீயவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்பவர், நல்லவர்களுக்கு அரனாக இருந்து காப்பவர். உயிர்கள் மீண்டும், மீண்டும் ஜனித்து மரணிக்கும் செயல்கள் யாவும் ஸ்ரீ சுதர்சனரை ஆதாரமாகக் கொண்டே நடக்கின்றன என்று வேதங்கள் கூறுகின்றன.

சுதர்சன ஹோமம்

விரைவில் நன்மை தரும் மிக சிறந்த ஹோமம் சுதர்சன ஹோமம் எனலாம். நல்ல ஆரோக்கியமும், வளமான வாழ்க்கையும் தரக்கூடிய ஹோமமாகும். மேலும் நவக்கிரக தோஷங்கள், திருஷ்டி தோஷங்கள், வழக்குகள், சத்ரு பயம், சோம்பல், காரியத்தடைகள், பொருள் நஷ்டம், விரயம், உறவுகளில் சிக்கல், தீய சக்தி குறித்த பயம், கிரக தோஷங்கள், கடன் பிரச்னைகள், உடல் நலக் கோளாறுகள், பசுவிற்கு ஏற்படும் நோய்கள் போன்ற பலவேறு அச்சங்களை தீர்க்கும் உன்னத ஹோமம் சுதர்சன ஹோமமாகும்.

மேற்கண்ட ஹோமம் இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஆனி மாதம் 6ம் தேதி சித்திரை நட்சத்திரம் 20.06.2021 ஞாயிற்றுக்கிழமை சுதர்சன ஜயந்தியை முன்னிட்டு சங்கடங்களையும்,  தீமைகளையும் அழித்து சுந்தர வாழ்வு தரும் சுதர்சன ஹோமம் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்ப்டி நடைபெறவுள்ளது. இந்நாளில் சக்கரத்தாழ்வார்க்கு நடைபெறும் ஹோமங்களிலும், பூஜைகளிலும், அபிஷேகங்களிலும் பங்கேற்று வணங்கி வழிபட எண்ணியவை நிறைவேறும்.

சுதர்சன ஹோமத்துடன் ஶ்ரீ லஷ்மி நரசிம்ம ஹோமம், ஶ்ரீ மகாலட்சுமி ஹோமம், ஶ்ரீ தன்வந்திரி ஹோமம், ஶ்ரீ லஷ்மி வராகர் ஹோமம் போன்ற ஹோமங்கள் நடைபெற்று சக்கரத்தாழ்வருக்கு நவக்கலச திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. இதில் பங்கு பெறும் நபர்களுக்கு ஹோம பூஜையில் வைத்த மஹா சுதர்சன யந்திரம் மற்றும் சுதர்சன ரக்ஷ்சை வழங்கப்பட உள்ளது.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images