வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஞாயிறு பிரதோஷத்தை முன்னிட்டு இன்று14.07.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கும், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்களுக்கும் சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷமே ஞாயிறு பிரதோஷம் ஆகும். பிரதோஷ வேளையும் ராகு காலமும் ஒன்று சேர வருவதால் இப்பிரதோஷம் மிக சிறப்பு வாய்ந்ததாகும். இந்நாளில் நடைபெறும் பிரதோஷ பூஜைகளில் பங்கேற்று சிவபெருமானுடன் நந்தி தேவனை வணங்குவது மிக சிறந்த பலன்களை அளிக்கவல்லது. ராகு கேது தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும் அகலும், தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் கைக்குடும், சிவபெருமானின் பரிபூரண அருள்பெற்று ஞானத்துடனும், யோகத்துடனும் நல்வாழ்வு வாழலாம், கல்வி,உத்தியோகம், சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றங்களை பெறலாம்.
மேலும் இப்பூஜைகளில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஸ்தாபகர் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.