வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தின் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், அழைப்பினை ஏற்றும் வருகிற 12.6.2015 வெள்ளிக்கிழமை முதல் 27.6.2015 வெள்ளிக்கிழமை வரை அமெரிக்கா பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தப் பயணத்தின் போது பல்வேறு பக்தர்களின் இல்லங்களில் நடைபெறும் குடும்ப விழாவிற்கும், ஆலயங்களுக்கும், உறவினர்களின் இல்லங்களிலும் விஜயம் செய்து ஆசி வழங்க உள்ளார். மேலும் பல்வேறு முக்கிய நபர்களையும் சந்திக்க உள்ளார். பாலஜோதிட வாசகர்கள் மற்றும் இணையதள அன்பர்கள், முகநூல் நண்பர்கள், தன்வந்திரி ப்ளாக்ஸ்பாட் வாசகர்கள் தங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வசித்து வந்தால் கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் மூலவர் தன்வந்திரி பகவான் மற்றும் 73 தெய்வ திருச்சன்னதிகளையும், 468 சித்தர்களையும் ஸ்தாபிதம் செய்து தினசரி யாகங்களையும், பூஜைகளையும், அன்னதானத்துடன் தர்ம காரியங்களையும் செய்து வருகிறார். மேலும் முதியோர் இல்லம், ஆயுர்வேத மருத்துவமனை, யோகா பயிற்சி மையம் போன்றவைகளை அமைத்து மக்களின் நலனுக்காக சேவை செய்து வருகிறார். பல லட்சக்கணக்கான பக்தர்களின் இதயங்களில் குடிகொண்டுள்ளார் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
Tamil version