இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் இன்று 28.12.2019 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் மற்றும் ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு சனி சாந்தி பூஜைகள் நடைபெற்றது. இதில் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் ஏராளமானவர் பங்கேற்று சனி கிரக ப்ரீதிக்காக பிரார்த்தனை செய்தனர். பங்கேற்ற பக்தர்களுக்கு யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதங்கள் வழங்கினார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.