Swati Homam at Danvantri Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகநலன் கருதி இன்று 12.04.2017 புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் ஹோமம் நடைபெற்றது..

சுவாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் நல்ல பலனை தரும் எதிரிகளின் தொல்லை விலகும். மரண பயம் நீங்கும். எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். கடன் சுமை குறையும். நோய் குணமாகும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலையில் இடைஞ்சல் அகலும். நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்தனை செய்தனர்.

இந்த யாகத்தில் பலவகையான மலர்கள், வஸ்திரம்,நெய் தேன்,வெண்கடுகு, வால்மிளகு,சீந்தல்கொடி,மேலும் பலவகையான மூலிகைகளும் சேர்க்கப்பட்டு மகா பீர்ணாகுதி நரடபெற்றது.. இதனை தொர்ந்து பால்,தயிர் இளநீர்,மஞ்சள், சந்தனம்,துளசி தீர்த்தம்கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ளஸ்ரீ கூர்ம லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பசும்பால் சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், பானகம்போன்ற பிரசாதங்களை நைவேத்தியம்செய்து செவ்வரளி மலர்களாலும் துளசி இதழ்களாலும் சிறப்பு அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றப்பட்டது.,

ஸ்ரீ லஷ்மி ஹயக்ரீவருக்கும் ஸ்ரீ த்த்தாத்ரேயருக்கும் சிறப்பு ஹோமம்.

இன்று புதன் கிழமை என்பதால் வாராந்திர பூஜையாக ஆண்டு தேர்வு எழுதி உள்ள மாணவ மாணவிகள் வெற்றிபெறவும் அதிக மதிப்பெண் பெறவும் ஸ்ரீ லஷ்மி ஹயக்கீரவருக்கும் வேதாந்ததேசிகருக்கும் சந்தான பிராப்த்தம் ஏற்பட ஸ்ரீ த்த்தாத்ரேயருக்கும் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றதுஇந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images