வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் இன்று 12.08.2016 வெள்ளி கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டும் ஆடிவெள்ளியை முன்னிட்டும் 508 தம்பதிகள் பங்கேற்ற மாபெரும் தம்பதி பூஜை நடைபெற்றது..இந்த தம்பதி பூஜை முன்னிட்டு காலை 7.00 மணியளவில் கோபூஜையும் நவகன்னியருக்கு பொங்கல் வைத்து 9 பெண்களுக்கு புடவை வஸ்திரம் தங்கத்திலான தாலி பட்டு புடவை சௌபாக்கிய பொருட்கள் வழங்கப்பட்டன. இதனுடன் 9 குழந்தைகளுக்கு பட்டு பாவாடைகுழந்தைகளுக்குரிய சோப்பு, கண்மை,வளையல்,,மருதாணி,சீப்பு,, கண்ணாடி,போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன .508 தம்பதியருக்கு பாதபூஜை செய்துபுடவை,வேஷ்டி, சௌபாக்கிய பொருட்கள் அன்னபிரசாதம் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டன.இன்று நடைபெற்ற குபேரலட்சுமி ஹோமத்திலும் பூஜையிலும் பங்கேற்ற சுமங்கலிகள் கணவர் ஆரோகியத்துடன் வாழவேண்டியும் ஒற்றுமையுடன் வாழவேண்டியும்,குழந்தைகள்உறவினர்கள்ஆரோகியத்திற்காகவும் மாங்கல்ய தோஷம் நல்கவும். பிரார்தனை செய்தனர்.இந்த பூஜையில் சுற்றுபுரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள்பயன்பெற்றனர்.பங்கு பெற்ற தம்பதிகளிடம் வருகைபுரிந்த பக்தர்கள்ஆசிபெற்னர். இதனை தொடர்ந்து தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் சிறப்புகள் அடங்கிய ஆன்மீக குறுந்தகடினை நெடுஞ்சாலை துறையினர் வெளியிட அதனை கன்னியாகுமரி சாமி தோப்பு அய்யா வைகுந்த வழி பால பிராஜதிபதி அடிகளார் பெற்றுக் கொண்டார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version