The Great Yagams in Amasavasai

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 13.06.2018 புதன் கிழமை அமாவாசையை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் அமாவாசை சரப சூலினி பிரித்யங்கிரா யாகம் நடைபெறஉள்ளது.

பிரத்யங்கரா தேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். அன்னை சிம்ம முகமும், பெண் உடலும் கொண்டு காணப்படுகிறார். கம்பீரமான விஸ்வரூபம். நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் எட்டு கரங்களுடன் மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள்.

அடியவருக்கு வாரி வழங்கும் விதமாக சாந்த ரூபிணியாக 4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், டமருகம் திகழ்கின்றன. அன்னைக்கு அபராஜிதா என்ற பெயரும் உண்டு அபராஜிதா என்றால் 'யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.

துர்கை தேவி மற்றும் சப்த கன்னியர்களுடன் சேர்ந்து பல அசுரர்களை அழித்தால் பிரத்தியங்கிரா தேவி. பிரத்யங்கிரா பைரவரை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. பிரத்யங்கிரா தேவி பல வடிவங்கள் உள்ளன.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில்பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் 6000 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு நிகும்பல யாகம் செய்து, தனக்கு யாகத்தில் கிடைத்த அம்பாளின் ஆகஞைப்படி 9 அடி உயரத்தில் ஐஸ்வர்ய கலசம் கொண்டு அம்பாளை பிரதிஷ்டை செய்து பிரதி மாதம் அமாவாசை, பௌர்ணமி அஷ்டமி மற்றும் சிறப்பு தினங்களில் நிகும்பலா யாகம் அல்லது பிரத்தியங்கிரா யாகம் செய்து வருகிறார். இந்த யாகத்தில் மூட்டை மூட்டையாக மிளகாய் சேர்க்கப்படுகிறது. இதில் துளி கூட பக்தர்களுக்கு கண் எரிச்சல் இருக்காது என்பது நிகழும் அதிசயம்.

உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் ‘திருஷ்டி’ எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன.

தீராத வியாதிக்குக்கூட மருத்துவர்களைச் சந்தித்து மருந்து வாங்கி நிவாரணம் பெற்று விடலாம். ஆனால், திருஷ்டி என்கிற கொடூர நோய்க்கு உள்ளாக நேர்ந்து விட்டால், அவ்வளவுதான்! சொத்து, சுகம், நிம்மதி, அன்பு இப்படி எதுவுமே நம்மிடம் தங்காது. காரணம் இது கலி காலம். ஒருவரது முன்னேற்றம் இன்னொருவரது முன்னேற்றத்துக்கு இடையூறாக இருப்பதாகக் கருதுகிற காலம் இது. போட்டியும் பொறாமையும் தலை விரித்து ஆடுகின்றன.

எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது. வீடுகளில் வசிப்பவர்கள் ஆரத்தி சுற்றுதல், எலுமிச்சம்பழம் உடைத்தல், பூசணிக்காய் உடைத்தல் போன்றவற்றை அடிக்கடி நிகழ்த்துவது திருஷ்டி கழிப்பதற்குத்தான். அதே சமயம் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருஷ்டி கழிக்கும் பிரமாண்ட ஹோமங்கள் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடிக்கடி நடந்து வருகின்றன. திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் திருஷ்டி அகலப் பெற்று வாழ்வில் பல முன்னேற்றங்களை அடைந்து வருகிறார்கள்.

இத்தகைய திருஷ்டி ஹோமங்களில் பக்தர்கள் கலந்து கொள்வதால், இருக்கிற திருஷ்டி அகல்வதோடு ராகு திசை நடப்பவர்களுக்கும் ராகு புக்தியினால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதற்கு சனி தசை, சனி புக்தி நடப்பவர்களும் இந்த ஹோமத்தில் பங்கேற்று அருள் பெறலாம்.மேலும் நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் வருகிற 13.06.2018 ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட யாகம் நடைபெறுகிறது. இந்த யாகத்தில் செஞ்சி தாலுக்கா நல்லான்பெற்ற பிள்ளை கிராமத்தில் உள்ள தவத்திரு. சிவஜோதி மோன சித்தர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பிக்க உள்ளார்.

உலக மக்களின் நலன் கருதியும், இயற்கைச் சீற்றங்கள் குறைந்து, சகல வளங்களையும் அனைவரும் பெறும் வண்ணம் இவை நடக்க உள்ளன. மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, நாயுருவி, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், கல் உப்பு, எலுமிச்சை சாதம், புளி சாதம், சர்க்கரை பொங்கல், இனிப்பு மற்றும் கார வகைகள், சிகப்பு குங்குமம், மஞ்சள், முறம், வெள்ளை பூசணிக்காய் ஆகியவற்றைக் கொண்டு இந்த மஹா யாகம் பல அருளாளர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

எனவே பக்தகோடிகள் வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் வந்திருந்து இந்த யாகத்தில் கலந்து கொண்டு ஸ்ரீதன்வந்திரி பெருமாளையும், மற்றும் இங்குள்ள 73 பரிவார தெய்வங்களையும், வேறெங்கும் தரிசிக்க இயலாத 468 சித்தர்களையும் ஒரு சேர தரிசித்து, கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகளின் ஆசியையும் பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 04172 - 230033, செல் - 9443330203

Upcoming Events
Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images