Theipirai Astami Yagam and Maha Bairava Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு வருகிற21.09.2019 சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை தேய்பிறை அஷ்டமி யாகத்துடன் அஷ்டபைரவர் பூஜை நடைபெற உள்ளது.

சொர்ண கால பைரவர் ஹோமத்துடன் அஷ்ட பைரவர் பூஜை :

எதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களின் பாபத்தை நீக்கி அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில்களையும் செய்வதால் இவர் பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.

பைரவர் வழிபாடு ஏன் ?

துன்பங்களும், துயரங்களும் வாழ்க்கையில் தொடர்கதையாகிப் போனால் வாழ்க்கை என்பதை வாழப் பிடிக்காமல் அதனைத் தீர்த்துவிடத்தான் மனம் ஏங்கும். அப்படி சோகத்தின் விளிம்பில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் அமுத மொழியாக பைரவர் வழிபாடு கூறப்படுகிறது.

கடவுள் வழிபாடு செய்துவிட்டு அதற்கான பலன்களை எதிர்பார்க்கும் பக்தர்களுக்கு உடனடி நிவாரணம் தரும் கடவுளாக பைரவர் விளங்குகின்றார். அதனால்தான் பைரவர் வழிபாட்டின் பலனைக் குறிக்க பைரவர் வழிபாடு கைமேற் பலன் இந்தப் பழமொழி வழங்கப்பட்டது.

நவக்கிரகங்களின் வக்கிரத்தால் பலர் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தை அடைகிறார்கள். அதுவே அவர்களின் நல்ல பார்வையால் சிலர் எதிர்பாராத நன்மைகளையும், புகழையும் அடைகிறார்கள். நன்மைகள் கிடைத்தால் சரி,ஆனால், வரும் துன்பங்களிலிருந்து மீள என்ன வழி என்று கேட்டால் பைரவர் வழிபாடு செய்யுங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பைரவர் வழிபாடு செய்வதனால் கடுமையான தோஷங்களும் நீங்கும் துன்பங்கள் யாவும் ஓடி ஒளியும் இன்பங்கள் எல்லாம் தேடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பைரவருக்கு வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் உலக நலன் கருதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 21.09.2019 சனிக்கிழமைமாலை 5.30 மணிக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ஸ்வர்ண கால பைரவர் யாகமும் மஹாபைரவர் யாகமும், அஷ்ட பைரவர் வழிபாடும் நடைபெறுகிறது.

இந்த யாகங்களில் பக்தர்களின் பலவிதமான தோஷங்கள் நீங்கி தேவைகள் பூர்த்தி அடையவும் கீழ்கண்ட காரணங்களுக்காகவும் பிரார்த்தனை நடைபெற உள்ளது.

வர வேண்டிய பணம் வந்து சேரவும், தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை அமைய வேண்டியும், எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடவும், வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் நீங்கி, வலியும், வேதனையும் பெருமளவு குறையவும், சனியின் தாக்கம் (ஏழரைச்சனி,அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரவும், வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகவும், தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்து கொண்டே செல்லவும், அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகவும், பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும், நமது கடுமையான கர்மவினைகள் தீரவும், தம்பதிகள் ஒற்றுமையுடன் இருக்கவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், வழக்கு வியாஜ்ஜியங்களில்வெற்றி பெறவும், வெளி நாடு செல்ல வாய்ப்பு ஏற்படவும், வெளி நாட்டில் வாழ்பவர்கள் நிம்மதியாக இருக்கவும், செய்வினை மாந்திரீகம், சத்ரு உபாதை போன்றவைகளால் ஏற்படும் தொல்லைகள் அகலவும் ஸ்ரீ மஹாபைரவர், சொர்ண பைரவர் யாகத்துடன் அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்ட பைரவர்,குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் போன்ற அஷ்ட பைரவர்களுக்கும், மஹாபைரவர், சுவர்ண ஆகர்ஷண பைரவருக்கும் மகா அபிஷேகம், விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து கூஷ்மாண்ட தீபம் ஏற்றி செவ்வரளி பூக்களால் அர்ச்சனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images