Thirumanjana Festival and Puspa Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, அக்னி நக்ஷத்திரத்தின் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும், வருண பகவானின் கருணை வேண்டியும், உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் சென்ற 04.05.2019 சனிக்கிழமை முதல் 27 நாட்கள் 27 நக்ஷத்திரகாரர்களின் நலன் கருதி அஸ்வினி நக்ஷத்திரம் முதல் ரேவதி நக்ஷத்திரம் வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் தொடர் திருமஞ்சன திருவிழா, லக்ஷார்ச்சனை, புஷ்பாஞ்சலி வைபவங்கள் இன்று 31.05.2019வெள்ளிக்கிழமை நவகலச திருமஞ்சனத்துடன் பூர்த்தி பெற்றது. இதனை தொடர்ந்து நாளை 01.06.2019 சனிக்கிழமை சஹஸ்ரநாம அர்ச்சனையும், 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை புஷ்பாஞ்சலியும்,அன்னப்பாவாடை உற்சவமும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற உள்ளது.   இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images