வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் 73 பரிவார தெய்வங்கள், 468 சித்தர்களுடன் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் மழை வளம் வேண்டியும், இயற்கைவளம் வேண்டியும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பெருகவும் வேண்டி, ஆரோக்கியம் வேண்டியும் அக்டோபர் மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை முதல் 7ம் தேதி மாலை 5.00 மணிவரை திருவண்ணாமலைக்கு 3வது முறையாக பாதயாத்திரை மேற்கொள்கிறார். இந்த பாதயாத்திரையானது அக்டோபர் மாதம் 5ம் தேதி திங்கட்கிழமை முதல் காலை 5.00 மணிக்கு பீடத்திலிருந்து புறப்பட்டு வாலாஜாபேட்டை, ஆற்காடு, தாமரைப்பாக்கம், ஆரணி, போளூர், கலசப்பாக்கம் வழியாக 7ம் தேதி மாலை 5.00 மணியளவில் திருவண்ணாமலை சென்றடைந்து, அருணச்சல ஈசுவரருக்கு சிறப்பு பிரார்த்தனையுடன் சிறப்பு பூஜை நடத்த உள்ளார்.
மேலும் வருகிற 26.11.2015 வியாழன் முதல் 29.11.2015 ஞாயிறு வரை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் 12 ஆம் ஆண்டு இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டும்விழா சிறப்பாக நடைபெறவும் இந்த பாதயாத்திரை நடைபெற உள்ளது
ஸ்வாமிகளுடன் 30க்கும் மேற்பட்ட தன்வந்திரி குடும்பத்தினரும், சேவார்த்திகளும் உடன் செல்கின்றனர். நீங்களும் ஸ்வாமிகளுடன் பாதயாத்திரையில் பங்கேற்கவும், பூஜையில் கலந்து கொள்ளவும் விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும்.
மேலும் பாதயாத்திரையில் வழியில் உள்ள ஆலயங்களை தரிசிக்க உள்ளார். ஸ்ரீ அருணாச்சல ஈஸ்வரர் அருளும், ஸ்ரீ தன்வந்திரி பகவானின் அருளும் பக்தர்கள் அனைவருக்கும் கிடைத்திடுமாறு பாதயாத்திரையின் போது வேண்டி கொள்கிறார்.
மேலும் தொடர்புக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா,