வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 27.04.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை திருவோண நக்ஷாத்திரத்தை முன்னிட்டு ஹோமம், தைலாபிஷேகம் திருவோண தீபம் போன்ற பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பலன் பெற்றனர்.
மூலவர் நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி ஆகவும், உற்சவர் வைத்தியராஜா ஆகவும், தாயார் ஆரோக்யலக்ஷ்மியுடன் திருவருள்புரியும் திருத்தலமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் திகழ்ந்து வருகிறது. இப்பீடத்தில்75 பரிவார மூர்த்திகள், சிவலிங்க சொரூபமாக உள்ள 468 சித்தர்களுடன் மூலஸ்தானத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சங்கு சக்கிரத்துடன், அமிருத கலசம், சீந்தல் கொடி, கையில் கத்தியுடன் நின்ற கோலத்தில் அருள் பாவிக்கின்றார். இவரது மார்பில் மகாலட்சுமியும், தலையில் ஆதிசேஷனுடன் புன்முறுவலுடன் பக்தர்களின் உளப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பெருமாளாக உள்ளார். இவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகம் திருவோண ஹோமத்துடன் நடைபெற்றது. பெருமாள் சந்நதியில் அகண்ட தீபத்தில் நெய் விளக்கேற்றி அதனை சுவாமி பாதத்தில் வைத்து ஆராதித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தைல பிரசாதமும், முக்குடி கஷாயமும் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.