Thiruvonam First Thiruvathirai Varai Continues Yagam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அடுத்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகின்ற 19.03.2020 வெள்ளிக்கிழமை பெருமாளுக்கு உகந்த திருவோணம் நட்சத்திரம் முதல் 31.03.2020 ஈஸ்வரனுக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரம் வரை தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை உலக மக்கள் ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர பரிவார மூர்த்திகளை வேண்டி தொடர் யாகமும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் சிறப்பு:

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோரின் வாக்கினை ஏற்று நோயற்று வாழட்டும் உலகு என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாக கொண்டு உலக மக்கள் நலன் கருதி ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை அமைத்து 78 பரிவார மூர்த்திகளுடன் மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து உள்ளார்.

இங்கு உள்ள மூலவர் மற்றும் உற்சவர் தன்வந்திரி இந்தியாவின் பல இடங்களில் 665 நாட்கள் சுமார் இரண்டு லட்சம் கிலோமீட்டர் கரிக்கோல பயணம் செய்து 500க்கும் மேற்பட்ட புண்ணிய க்ஷேத்திரம் சென்று 2000க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள பல்வேறு ஆலயங்கள், மடங்கள் சென்று பல மடாதிபதிகளின் வழிபாடுகளை ஏற்றுக்கொண்டு பல்வேறு புனித தீர்த்தங்களில் நீராடி 67 திவ்ய தேசப்பெருமாளின் அபிமானத்தை பெற்று தேசத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பக்தர்கள் மூலம் 147 தன்வந்திரி ஹோமம் செய்து சுமார் 46 லட்சம் பக்தர்கள் கைப்பட எழுதிய 54 கோடி தன்வந்திரி லிகிதஜப மஹா மந்திரங்களை பெற்று அவற்றை கர்ப்பகிரஹத்தின் கீழ் மந்திரமே யந்திரமாக வைத்து மூலவர் தன்வந்திரி பகவானை பிரதிஷ்டை செய்து தினமும் பல்வேறு விதமான சாந்தி பரிகார ஹோமங்கள் மற்றும் பூஜைகள் தொடர்ந்து செய்து வருகிறார்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடைபெறும் தொடர் ஹோமத்திலும் ஆராதனைகளிலும் பங்கேற்பதன் மூலம் உடலின் எதிர்ப்புத் திறன் உயர்ந்து ஆயுள் ஆரோக்கியம் மேம்படும், தீராத நோய்களை தீரும், கர்மவினை விலகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும், சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் மற்றும் பல நன்மைகளை பெறலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images