வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அன்ந்தலைமதுரா கீழ்புதுபேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால் , பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இவர்கள் இருவரும் ஏக தரிசனத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர். வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் காப்பு தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார்.
தைலக்காப்பு திருமஞ்சனம் :
வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜா அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் உள்ளத்துப் பிணி, உடல் பிணி மற்றும் தீவினைகளையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர். இந்தச் சந்நிதியில் "கயிலை ஞானகுருTamil version