Twenty One Special Homams

உலகில் சகல ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும் உலக இயக்கத்தை நிகழ்த்தி வருகிறார் இறைவன். தன்பாலும் தான் படைத்த உயிர்கள் பாலும் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் இறைவனிடம் நமது சுயநலன்களுக்காகச் செய்யும் பிரார்த்தனைகளைத் தவிர வேறு எதையும் சிறப்பாக இறைவனுக்காக நாம் செய்வதில்லை. இத்தகைய குறைகளை தீர்ப்பதற்காகவே செய்யப்படுது ஹோமங்கள் என்கிற யாகங்கள். முன்பு உலக நன்மைக்காகவும் இயற்கையைக் குளிர்வித்து இறைவனைக் காண யாகங்கள் செய்யப்பட்டு வந்தன. ஆயினும் இன்று தனிப்பட்டவர்களின் தேவைக்காகவும், நலன்களுக்காகவும் ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன.

யாகங்களின்போது, பல்வேறு சிறப்புகளுடைய இயற்கைப் பொருட்களான திரவியங்களை கொண்டு யாகத்தில் சேர்த்து வளர்க்கப்படும் தீயில் இருந்து கிளம்பும் புகையானது, காற்றில் கலந்து அந்தச் சூழல் முழுவதுமாகப் பரவி இயற்கையில் ஒரு நல்ல மாற்றத்தைச் செய்கிறது என்பதை நவீன விஞ்ஞானமும் ஏற்றுக்கொண்டுள்ளது. அதுமட்டுமல்ல. ஹோமங்களின்போது உச்சரிக்கப்படும் பல்வேறுபட்ட மந்திரங்களின் ஒலியலைகள், அந்த ஹோமம் எதற்காகச் செய்யப்படுகிறது என்ற நோக்கத்தை நிறைவேற்றிவைக்க உதவுகிறது. இதற்காகத்தான் பல்வேறு நோக்கங்களுக்காகச் செய்யப்படும் ஹோமங்களும் பல்வேறு தெய்வங்களின் மீதான, விதம் விதமான மந்தர உச்சாடனங்களைக் கொண்டு அமைந்திருக்கின்றன

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேள்வியில் பக்தர்களின் பல்வேறு நோக்கங்களையும், தேவைகளையும், பிரார்த்தனைகளையும் நிறைவேற்றித்தரும் வகையில் அந்தந்த தெய்வங்களுக்குரிய யந்திரங்களுக்கும் தெய்வங்களுக்கும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுருTamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images