VASTHU HOMAM (22.08.2021)

ரியல் எஸ்டேட் தொழில் சிறந்து விளங்கவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும் வீடு மனை போன்றவைகளில் உள்ள வாஸ்து தோஷங்கள் அகலவும் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் வாஸ்து ஹோமம் வருகிற 22.8.2021 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து பகவான் அமைப்பு:

வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

தனக்கென் ஒரு வீடு:

சிறிய தொழில், பெரிய தொழில் செய்வோர்க்கும், வியாபாரம் செய்வோர்க்கும் மற்றும் பலவகை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும், குடும்ப பெண்களுக்கும் சொந்தமாக ஒரு வீடுகட்ட வேண்டும் என்ற கனவு எல்லோருடைய மனதிலும் இருப்பது உண்டு. இதற்காக அவரவர் தங்கள் சக்திக்கு ஏற்ப வீட்டு மனைகளை வாங்கிப்போடுவதும், தான் குடியிருக்கும் வாடகை வீட்டை விலைக்கு வந்தால் வாங்கி போடலாம் என்பது சிலர் நினைப்பதும் உண்டு. அப்படி வாங்கிப்போட்ட மனைகளில் எப்போது பூமி பூஜை போட்டு தொடங்க வேண்டும் என்பது பற்றி சிலருக்குன் கேள்வியாக இருக்கும்.

மனை வீடு வாஸ்து:

''வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும் பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

வாஸ்து விழிப்பு நாள்:

நிகழும் ஆவணி மாதம் 6-ம் தேதி 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 07.23 முதல் 07.59 வரை வாஸ்து விழிப்பு நேரம் என்பதால், அந்த நேரத்தில் தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவான் சன்னதியில் வாஸ்து தோஷ நிவர்த்தி ஹோமமும் வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் பூமி பூஜை போட்டு வீடு கட்டத் தொடங்கினால், வேலைகள் வெகு சீக்கிரம் முடியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வாஸ்து ஹோம பிரசாதங்கள்:

ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று வாஸ்து புருஷன் விழித்திருக்கும் நாட்கள் தவிர, மற்ற சுப நட்சத்திரங்களில் வாஸ்து பூஜை செய்யலாம். அவ்வாறு செய்யும் நாட்களில் ரிஷபம், ப்மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப லக்கினம் சிறந்தது. வாஸ்து பூஜை செய்ய திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிழமைகள் சிறந்தவை. ரோஹிணி, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சுவாதி, அனுஷம், உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் கூடிய நாட்களில், துதியை, திரிதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகிய திதிகள் கூடிய நாட்களில் பூமி பூஜை செய்யலாம்.

ஒரு ஆண்டின் எட்டு நாட்கள் வாஸ்து பகவான் கண்விழித்து இருப்பார்

அந்த நாளில் வாஸ்து பூஜை செய்தால் எல்லா நன்மையும் கிடைக்கும் மனை வீடு பூமி தொடர்பான குறைபாடுகள் இருந்தால் நிவர்த்தியாகும் ஒவ்வொரு வருடமும் வாஸ்து பூஜை நாட்களில் கோவிலில் சிறப்பு வாஸ்து ஹோமம் நடைபெறுகிறது புதிதாக வீடு கட்டுபவர்கள் பழைய வீட்டில் தோஷம் இருப்பதாக கருதுபவர்களும் வாஸ்து பூஜை நாட்களில் நடைபெறும் ஹோமத்தில் கலந்துகொண்டால் வாஸ்து தோஷம் நீங்குவதாக கூறப்படுகிறது.

மேற்கண்ட காரணங்களுக்காகவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்படும் தடைகள் விலகவும் வீட்டு மனைகள் விரைவில் விற்கவும் பூமி லாபம் ஏற்படவும், விலை போகாத வீடு மனைகள் விலைபோகவும் அதனால பாதிக்கப்பட்ட மக்கள் நலம் பெறவும் தடைப்பட்ட கட்டிடப் பணிகள் விரைவில் முடியவும் வாலாஜா தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி வருகிற 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை காலை வாஸ்து ஹோமமும் வாஸ்து பகாவனுக்கு அபிஷேகமும் பஞ்சபூதம் மற்றும் அஷ்டதிக் பாலகர்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.  இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

With the Blessings of our beloved Guruji 'Yagnasri Kayilai Gnanaguru' Dr. Sri Muralidhara Swamigal, Founder, Sri Danvantri Arogya Peedam is organizing Vasthu Homam on 22nd  August 2021, Sunday (Avani 6th) from 7.23 AM to 7.59 AM on the account of Vaastu Day

Increasing positive vibrational energies in a Home,Office,Business place & Remove all obstacles of life. Vastu is performed to beget business & family prosperity and good health. Anyone is desirous of praying to God to remove any obstacles in any of his plan/ work/Business and also to be victorious in his deeds can go for vastu prayer. This Powerful homam accelerate the growth. Vastu homam has immense power that helps incerase business cash flow, business expansion, overcome office problems,factory sales increase,industrial progression

BENEFITS OF VASTHU HOMAM

Vastu homam is a suitable for those who want to avoid potential threats. This homam makes ways for overcoming mental disturbances to get peace of mind. It is performed to overcome diseases. If someone need to get positive energies in a building can choose this homam. It is performed for success in works/projects without any problems. It is performed for education, marriage, health and wealth. It is performed to attain prosperity in various aspects of life. It is also done at the beginning of other Homas.

MORE DETAILS PLEASE CONTACT 94433 30203

 

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images