Vasthu Homam and Ashta Bhairava Yagam

இப்பாரத பூமியில் ஒரே மேடையில், ஒரே நேரத்தில் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண வைபவங்கள் நடைபெற்ற வேலூர் மாவாட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடமாகும். இப்பீடத்தின் ஸ்தாபகர் மற்றும், பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வருகிற 23.04.2019 செவ்வாய்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து ஹோமமும், 27.04.2019 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட பைரவர் யாகமும் நடைபெறுகிறது.

யார் இந்த வாஸ்து புருஷன் ?

நாம் கடை, மண்டபம், வீடு, பொது கட்டிடங்கள் மற்றும் ஆலயங்கள் கட்டும்போது சிலர் வாஸ்து சாஸ்திரம் பார்க்கின்றோம். சிலர் பார்க்காமலையே இறைவனை பிரார்த்தித்து கட்டிட பணிகளை துவங்குகின்றோம். ஆனால் யார் இந்த வாஸ்து புருஷன் என்று தெரியுமா.

அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், “இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்,” என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. பூமிபூஜையின் போது வாஸ்து ஹோமம் மற்றும் பூஜை செய்தால் கட்டுமானப்பணி தடையின்றி நிறைவேறும்.

வளம் தரும் வாஸ்து நாளில் பூஜை :

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்களை அறிந்து, நம் வீட்டைக் காக்கும் தெய்வமான வாஸ்து பகவானை வாஸ்து நாளில் பூஜித்துவிட்டு வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளைபெறலாம்.

எந்த தினங்களில் பூஜிக்கலாம்?

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.

வருகிற 23.04.2019 செவ்வாய்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் நடைபெற உள்ள வாஸ்து பகவான் ஹோமத்தில் நவகிரகங்களின் திருவருளைப் பெறும்பொருட்டு, சூரியதேவனே போற்றி, சந்திரனே போற்றி என்று துவங்கி நவகிரகங்களையும் போற்றிக்கூறி வழிபட்டு நவதானிங்களையும், நவ ரத்தினங்களையும், சிறப்பு மூலிகைகளையும் சேர்க்கப்படுகிறது. மேலும் வாஸ்து சன்னதியில் அமைந்துள்ள அஷ்டதிக் பாலகர்களை வணங்கி, பூக்கள் அட்சதையைச் சமர்ப்பித்து தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி மற்றும் சாம்பிராணி கொண்டு தூப ஆராதனையும், தீப ஆரத்தியும் காட்டி வழிபாடு நடைபெற உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமபூஜையில் அனைவரும் பங்கேற்று பலன் பெற அழைக்கின்றோம்.

தேய்பிறை அஷ்டமியில்

சொர்ணாகர்ஷன பைரவ ர் , அஷ்ட பைரவர்

வணங்கினால் எட்டு திக்கிலும் புகழ் பெறலாம் .

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 27.04.2019 சனிக்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மாலை 5.00மணி முதல் 7.00 மணி வரை மஹாலக்ஷ்மி அருள் பெற பணம் தரும் பைரவர் யாகமும் எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகங்கள் நடைபெறுகிறது. சிவபெருமான் எடுத்த 64 அவதாரங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக போற்றப்படுவது பைரவ அம்சமே. ஸ்ரீ மஹா கால பைரவ பெருமான் அனைவரது வாழ்க்கைக்கும் துணை நின்றார். அவரை வந்து வணங்கும் அனைத்து பக்தர்களுக்கும் சகல விதமான வெற்றிக்கும் வாழ்க்கைக்கும் வழியமைத்து கொடுத்து ஆசிர்வதிப்பார்.

அஷ்ட பைரவர்கள்: மஹா பைரவர் எட்டு திசைகளை காக்கும் பொருட்டு அஷ்ட(எட்டு) பைரவர்களாகவும், அறுபத்து நான்கு யோகங்களையும் கலைகளையும் வழங்கும் பொருட்டு அறுபத்து நான்கு பைரவர்களாகவும் விளங்குகிறார்கள்.

அஷ்ட(எட்டு) பைரவர்கள்: திசைக்கொன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் அஷ்ட பைரவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். சில கோவில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள். எண் திசை காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தின் சிறப்பு : எட்டு திசைகளை காத்து, நம்மை வழி நடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும்.

தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் பூஜித்து யாகத்தில் கலந்து கொண்டால் தொல்லைகள் அகலும் மற்றவர் செய்த ஏவல், பில்லி, சூனியம் போன்ற அபிசார தோஷங்கள் விலகும், மருத்துவர்களை தோல்வியுறச் செய்யும் கர்ம வியாதிகளில் இருந்து விடுபடும், அஷ்ட தரித்திரம் நம்மை விட்டு விலகி பெருஞ்செல்வம் சேர்ந்திடும், தங்கம் நம்மோடு எந்நாளும் தங்கியிருக்கும், வம்பு வழக்குகளில் வெற்றி கிட்டும், பொறாமை, கண்திருஷ்டி அகன்று சுகம் பெற்றிடலாம், தொட்டது துலங்கும், எதிரிகளும், தடைகளும் மறைந்து எதிலும் வெற்றி பெற்றிட வாய்ப்பு கிடைக்கும்,இத்தகைய சிறப்பு வாய்ந்த அஷ்ட திக்கும் காக்கும் அஷ்ட பைரவர் யாகத்தில் கலந்து கொண்டு பைரவரை துதிப்பது மிகவும் அவசியமாகும்.

பணம் தரும் பைரவர் எனும் ஸ்ரீ மஹா சொர்ணாகர்ஷன பைரவர் ஹோமத்தின் சிறப்பு: ஸ்ரீசொர்ணகால பைரவரை வழிபடுவதினால் பலன் வாஸ்து பகவானுக்கு குரு என்பதால் நிலம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் விலகும். சனி பகவானுக்கு குரு என்பதால் சனி பகவான் தொல்லையிலிருந்து விடுபடலாம். திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சினை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும். அஷ்ட தரித்திரம் விலகும். பிள்ளைப்பேறு உண்டாகும். வழக்குகளில் வெற்றி பெறலாம். வியாபாரத்தில் லாபம் அடையலாம். இழந்த பொருட்களை திரும்ப பெறலாம். சிறந்த குருநாதர் அல்லது சித்தர் அருள் தானாகவே கிடைக்கும்.

தன்வந்திரி பீடத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் அமைப்பு : ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ளவாறு ஸ்ரீசொர்ணகால பைரவருக்கு தனி பைரவர் பீடம், அஷ்ட பைரவர், கால பைரவருடன் வேறு எங்கும் இதுபோன்று கிடையாது எனலாம். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கவசத்துடன் பொன் நிறமாக சர்வானந்த கோலாகலராக கற்பக விருட்சத்தின் மேல் கங்கா ஜடா முடியுடன், சந்திர பிரபை சூடி, திருக்கழுத்தில் நாகபரணம் அணிந்து திருக்கரங்களில் சங்க நிதி பத்ம நிதியுடனும் மடியில் பூரண கும்பத்துடன் பத்ர பீடத்தில் அமர்ந்திருக்க அதன் பின்னே சொர்ண பைரவி ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் அருகில் வந்து அமர்ந்து ஒரு திருக்கரத்தால் ஸ்ரீமஹா சொர்ணகால பைரவப் பெருமானின் இடையை தழுவியவாறு மற்றொரு திருக்கரத்தில் சொர்ண கும்பத்துடன் அருகில் வந்து அமர்ந்து புன்னகை தவழும் திருமுகத்துடன் உலகிற்கு பொன்னையும் பொருளையும் அள்ளித்தரும் கோலத்துடன் ஸ்ரீமஹா சொர்ணாகர்ஷன பைரவர் திருக்கோலம் கொண்டு தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் மனதில் உதித்தபடி பிரதிஷ்டை ஆகி உள்ளார். வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டை எனும் குபேரபுரியில் உறைந்து உலக மக்களுக்கு அருள்மழை பொழிந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த சொர்ணாகர்ஷண பைரவருக்கு வரும் தேய்பிறை அஷ்டமியில் காலையில் நடைபெறும் சொர்ண பைரவர் யாகத்தில் கலந்து கொண்டால் சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர் அருள் கிடைக்கும்.

இதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உலர் திரட்சை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மிளகு, நல்லெண்ணை, எளுமிச்சம் பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான், அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வம் பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images