Vasthu Homam and Maha Kalabhairavar Special Poojai

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வாஸ்து நாளை முன்னிட்டு இன்று04.06.2019 செவ்வாய்கிழமை பிரதமை திதியில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும்,பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. மேலும் 11.00மணி முதல் 3.00 மணி வரை பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கு குருதி பூஜையும், அபிஷேகமும், சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.

இப்பூஜைகளில் வீடு, மனை வாஸ்து தோஷங்கள் நீங்கவும், கெட்ட சக்திகள் விலகவும், குடும்பத்தில் சச்சரவு நீங்கவும், தாம்பத்திய உறவில் விரிசல் அகலவும், நல்ல வேலை கிடைக்கவும், திருஷ்டிகள் நீங்கவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும்,திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும் பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பிரசாதங்கள் வழங்கி சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images