வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் ஏழைஎளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றி தெரிந்துகொள்ளும் விதத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்துபகவானுக்கென்று ஒரு ஆலயம் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளால் அமைக்கப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் எனும் வகையில் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார்.
இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர்.
வாஸ்து பகவான் அமைப்பு:
வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்க, அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது.
வாஸ்து நாள் வாஸ்து ஹோமம்:
வருகிற 28.10.2017 சனிக்கிழமை அன்று ஐப்பசி மாதம் 11ஆம் தேதி வாஸ்து நாள் என்பதால் காலை 7.30 மணி முதல் 9.00 மணிக்குள்ளாக வாஸ்து ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று நாம் வசிக்கும் இல்லங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும் மற்றும் தொழிற்ச்சாலைகளிலும் இருக்கும் வாஸ்து தோஷங்கள் நீங்கி வளம்பெற ப்ரார்த்திக்கின்றோம்.
வாஸ்து தோஷத்தால் ஏற்படும்தொல்லைகள்:
கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில் சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள், தொழில் செய்யும் இடத்தில் நல்ல நம்பிக்கையான நபர்கள் இல்லாமை, பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்கவழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் ஏற்பட வழிவகை செய்யும். இத்தகைய தோஷங்களை கண்டறிந்து நீக்கவும், தடைகள் விலகவும் மேற்கண்ட வாஸ்து ஹோமம் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version