வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்கள் நலன் கருதி வாஸ்து நாளை முன்னிட்டு நாளை04.06.2019 செவ்வாய்கிழமை பிரதமை திதியில் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
வீடு, மனை, கட்டிடங்களின் அமைப்பை தீருமானிப்பது தான் வாஸ்து சாஸ்திரம். இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அதிபதியே ஸ்ரீ வாஸ்து புருஷர் ஆவார். இவர் கண் விழிக்கும் நாளே வாஸ்து நாள் எனப்படுகிறது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் 3 3/4 நாழிகைதான் (1 1/2 மணி நேரம்) தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த நேரத்தை வாஸ்து பூஜை, பூமி பூஜை செய்வதிற்கு உகந்த நேரம் ஆகும்.
சிலரது வீட்டில் குடிப்பதற்கு கூட குடிநீர் கிடைக்காமல் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். சில குடும்பத்தில் வீடு கட்டுதல்,மனை வாங்குதல், தொழில் துவங்குவதல், விவசாயம் செய்தல், வீடு பழுது பார்த்தல், நகை வாங்குதல், போன்ற எந்த விதமான செயல்களில் இறங்கினாலும் அதில் பல்வேறு வகையான தடைகள் ஏற்படும். சிலரது வீட்டில் குடும்ப தலைவனோ, குடும்ப தலைவியோ வசிக்க மாட்டார்கள். சிலரது வீட்டில் அடிக்கடி பொருட்கள் திருடு போவதும், தீ விபத்து ஏற்படுவதுமாக இருக்கும். சிலரது வீடடில் எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் சேரவே சேராது. சிலரது வீட்டில் துர்மரணங்கள் ஏற்படும். இன்னும் சிலரது வீடடில் தேவை இல்லாமல் பிரச்சனை வந்துகொண்டே இருக்கும். இதற்கான முக்கிய காரணம் ஜாதக தோஷம் மட்டுமின்றி வாஸ்து பிரச்சனையாக கூட இருக்கலாம். இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட நாளை வாஸ்து நாளை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று குருவருளுடன் திருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.