Vasthu Shanthi Homam Conducted on June 3rd for Sri Vashthu Bagavan in Sri Danvantri Peedam

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரிபீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன் அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் வாஸ்து பகவானுக்கு இன்று வாஸ்துநாள் என்பதால் வாஸ்துசாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் பஞ்ச திரவிய அபிஷேகமும் நடைபெற்றது.

கணவன் மனைவிக்குள், சுற்றத்தாருக்குள், நண்பர்களிடத்தில், தொழில் செய்யும் இடத்தில், சக வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் பணப் பிரச்னை, பொருளாதார தடைகள், திருமணத் தடை, குழந்தையில்லாமை, ஆரோக்ய குறைவு, குழந்தைகள் பெற்றோர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், தவறான பழக்க வழக்கங்கள், மன உளைச்சல்கள், நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள் போன்ற எண்ணற்ற தோஷங்கள் நீங்க இந்த ஹோமத்தில் பங்கேற்றவர்கள் ப்ரார்த்தனை செய்தனர்.

இந்த ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்துமண், வாஸ்து சாம்பிராணி மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.

இதில் தமிழகம்மட்டுமின்றிஆந்திரா,கர்நாடகாவிலிருந்தும்,பக்தர்கள்பங்கேற்று வாஸது பகவானையும் இதர பரிவார தெய்வங்களையும் தரிசனம் செய்தனர் மேலும் நாளை 04.06.2016 சனிக் கிழமை காலை 10.00 மணி அளவில் சனி கிரகத்தனால் ஏற்படும் தோஷங்கள் அகல சனிசாந்தி ஹோமம் நடைபெற உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் தொடர்புக்கு

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை-632513.
வேலூர் மாவட்டம்
தொலைபேசி : 04172-230033
செல் : 9443330203
Website : , www.danvantripeedam.blogspot.in , www.danvantritemple.org Mail : danvantripeedam@gmail.com

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images