Vastu Shanti Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வாஸ்து நாளை முன்னிட்டு வருகிற 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

பிரதி ஒவ்வொருவருக்கும் தேவையானது நல்ல நிம்மதியும், மன நிறைவான வாழ்க்கையும் தான் எனலாம். அத்தகைய நிறைவை தரும் பூஜை தான் வாஸ்து பூஜை எனலாம்.

வாஸ்து சாந்தி:

வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், வஸ்துக்களில் இருந்து வந்தது வாஸ்து என்றும், வாஸ்து வாஸ்தவம் தான் என்றும் சொல்லப்படுகிறது. பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக்கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்திசெய்வதே வாஸ்து பூஜையாகும். வாஸ்து நாளில் வாஸ்து புருஷனுக்கு நடைபெறும் வாஸ்து ஹோமத்தில் பங்கு பெற்று வளம் பெறலாம்.

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் :

வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிரமங்கள் குறையும் வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

வாடகை வீட்டில் இருக்கும் ஒருவருக்கு சொந்த வீடு அமையவும், உடல் உபாதைகளால் துன்பப்படுபவர்களுக்கு ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும், கல்வியில் மந்தமாக உள்ள குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும், நஷ்டத்தில் நடைபெறும் தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற பல செயல்களில் வளமை பெறவும், பொருளாதாரத்தில் தரம் உயரவும், அதிக கடன் உள்ளவர்களுக்கு கடன்கள் அடைய உபாயம் கிடைக்கவும், மேற்கண்ட வாஸ்து ஹோமம் வழிவகை செய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். வாழ்க்கையை வளமாக்கி கொள்ள வருகிற 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமத்திலும், அதனை தொடர்ந்து ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு நடைபெறும் நவ கலச அபிஷேகத்திலும் ஆராதனைகளிலும் கலந்து கொண்டு வாழ்க்கையை வளமாக்கி கொள்ள பிரார்த்திக்கின்றோம்.

இந்த ஹோமத்தில் நவ தானியங்கள், வெல்லம், நெல்பொரி, சர்க்கரை பொங்கல், பூசனிக்காய், சிகப்பு வஸ்திரம், நெய், தேன், நவ சமித்துக்கள் சேற்க்கப்பட உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images