எம்பெருமாள், ஸ்ரீய:பதியாய் அவாப்தஸமஸ்தகாமனாய், அனந்த கல்யாண குணநிதியாய் பல திவ்ய தேசங்களிலும் மற்றும் பல க்ஷேத்திரங்களிலும் விஷ்ணுவின் பல திருநாமங்களில் எழுந்தருளி உள்ள நிலைகளில் ஸத்ய வ்ரத க்ஷேத்ர ஸமீபத்தில் கோயில் கொண்டு மஹாவிஷ்ணு அம்சமாக எழுந்தருளி பக்தர்களின் அபிமான க்ஷேத்திரமாகவும், சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம், காணாபத்யம், ஆகிய ஷண்மதங்களை கொண்டு ஆதிசங்கரர் வழியில் ஷண்மத பீடமாக திகழும், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பகவத் பாகவத ஆசார்ய அனுக்ரகத்துடன், ஸ்ரீவத்ஸ வம்சத்தில், ஸ்ரீ.உ.வே கம்பராஜபுரம் ஸ்ரீநிவாஸாச்சாரியார் ஸ்வாமிகள் - ஸ்ரீமதி.கோமளவல்லி தம்பதிகளுக்கு குமாரராக அவதரித்த கயிலை ஞானகுரு டாக்டர் முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் பங்குனி மாதம் 9-ஆம் நாள் 23.03.2018 வெள்ளிக் கிழமை ஷஷ்டி திதி, ரோஹிணி நக்ஷத்திரத்தில் கோபூஜை, கணபதி பூஜை, நவக்கிரக பூஜை, லக்ஷ்மி பூஜை, மற்றும் சகல தேவதா பூஜைகளும் ஹோமங்களும் துவங்கபெற்று பங்குனி மாதம் 12-ஆம் தேதி, 26.03.2018 திங்கட் கிழமை தசமி திதி, புனர்பூசம் நக்ஷத்திரம், அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள்ளாக ரிஷப லக்னத்தில் சகல தேவதா ஹோமத்துடன் பாஞ்சராத்ர ஆகமப்படியும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் திருவுளப்படியும் அருள்மிகு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு (1008) ஸஹஸ்ர கலசாபிஷேகமும் இதர பரிவார மூர்த்திகளுக்கு நவகலச திருமஞ்ஜன விழா 20கும் மேல்பட்ட சைவ, வைணவ ஆச்சாரியர்களை கொண்டு பல மடாதிபதிகள் முன்னிலயில் மாபெரும் வைபவமாக நடைபெற பகவத் க்ருபை கூட்டியுள்ளது.
தன்வந்திரி பீடத்தில் எழுந்தருளி அருள் பாவித்து வரும் கீழ்கண்ட தெய்வங்களுக்கு சகலதேவதா ஹோமத்துடன் நவகலச திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
வைணவம் : வைணவம் சார்ந்த ஸ்ரீ அஷ்டநாக கருடன், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனர், ஸ்ரீ சுதர்சனாழ்வார், ஸ்ரீ பால ரங்கநாதர், ஸ்ரீ சத்ய நாராயண பெருமாள், ஸ்ரீ கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ செந்தூர ஆஞ்சநேயர், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர், ஸ்ரீ கல்யாண ஸ்ரீநிவாசர், ஸ்ரீமத் வேதாந்த தேசிகர், ஸ்ரீ கோமளவல்லி சமேத ஸ்ரீநிவாச ஐயங்கார் (ஸ்வாமிகளின் பெற்றோரும் குருவும்).<\p> சௌரம் : சௌரம் சார்ந்த ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்.
சைவம் : சைவம் சார்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதேஸ்வரர், ஸ்ரீ தத்தாத்ரேயர் ஸ்ரீ பால்முனீஸ்வரர், ஸ்ரீ சொர்ணாகர்ஷ்ண பைரவர், ஸ்ரீ அஷ்ட பைரவர். காலபைரவர், ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ ராகு-கேது மற்றும் 468 சித்தர்கள் (சிவலிங்க சொரூபம்), ஸ்ரீ புத்த பிரான், ஸ்ரீ குருநானக், ஸ்ரீ ரமணர், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர், ஸ்ரீ ராகவேந்திரர், ஸ்ரீ சூரிய பாபா, ஸ்ரீ சீரடி தங்க பாபா, ஸ்ரீ வள்ளலார், ஸ்ரீ அத்ரிமகரிஷி பாதம், ஸ்ரீ மகாவீரர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீ மஹா அவதார் பாபா, ஸ்ரீ அகஸ்த்தியர், ஸ்ரீ வீரபிரம்மங்காரு, ஸ்ரீ குழந்தையானந்த மஹாஸ்வாமிகள், ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ சூரிய சந்திரன்.
ஸ்ரீ சாக்தம் : சாக்தம் சார்ந்த ஸ்ரீ மகிஷாசுர மர்த்தினி, ஸ்ரீ ஐஸ்வர்ய பிரத்யங்கிராதேவி, ஸ்ரீ லட்சுமிகுபேரர், ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி, ஸ்ரீ பாரதமாதா, ஸ்ரீ கஜலட்சுமி, ஸ்ரீ மாமேரு, ஸ்ரீ வாணிசரஸ்வதி, ஸ்ரீ காயத்ரிதேவி, ஸ்ரீ அன்னபூரணி, ஸ்ரீ அனுசுயாதேவி, நவகன்னிகைகள், வனதுர்கா.
காணாபத்யம் : காணாபத்யம் சார்ந்த ஸ்ரீ வல்லப கணபதி, ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ விநாயக தன்வந்திரி, ஸ்ரீ தன்வந்திரி விநாயகர்.
கௌமாரம் : கௌமாரம் சார்ந்த ஸ்ரீ கார்த்திகை குமரன், ஸ்ரீ பாலமுருகன். போன்ற ஷண்மத தெய்வங்களுக்கும் விருட்ச பிரதிஷ்டை செய்துள்ள காலசக்கரத்தில் 27 நக்ஷத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் ஸ்ரீ அஷ்டதிக்பாலகர்கள், ஸ்ரீ வாஸ்து பகவான் போன்றவர்களுக்கும் மேற்கண்ட தேதிகளில் சகல தேவதா ஹோமங்கள் நடைபெற்று 26.03.2018 திங்கட் கிழமை காலை நவகலச திருமஞ்சனத்துடன் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
அது சமயம் கிராம பொது மக்களும், ஆன்மிக அன்பர்களும், பக்த மஹா ஜனங்களும், பரம பாகவதர்களும் கலந்து கொண்டு மேற்கண்ட தெய்வங்களின் அருள் பெற்று நோயற்ற வாழ்வுடன், குறைவற்ற செல்வத்துடன் கல்வி மேன்மை, வியாபார லாபம், உத்யோக உயர்வு, தொழில் வளர்ச்சி, மழை வளம், விவசாய வளர்ச்சி மற்றும் பதினாறு வகையான ஐஸ்வர்யங்களுடன் சுகானந்த பெருவாழ்வு பெற்று இகபர இன்பம் அடைய எம்பெருமான் ஆலயம் நோக்கி வர வேண்டுமாய் அகங்குளிர அனைவரையும் வருகTamil version