Vinayagar Chadhurthi - Ganapathi Homam

வேலுார் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று காலை விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு மஹா கணபதி ஹோமமும் 23 வகையான இலைகளை கொண்டு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது. 13 ஆண்டுகளுக்கு முன்பு தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறுங்கும் இல்லாத வகையில் நான்கடி உயரத்தில் சிம்ம பீடத்தில் ஓரே கல்லில் ஓரு புறம் வினைதீர்க்கும் விநாயகர், மறுபுறம் பீணிதீர்க்கும் தன்வந்தரி வடிவமைக்கப்பட்டு அவ்வப்போது கணபதிக்குரிய கணபதி ஹோமமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற்று வருகிறது...சமீபத்தில் 1,32 ஆயிரம் மோதகங்களை கொண்டு வாஞ்சாகல்ப கணபதி ஹோமம் சிறப்பாக நடைப்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் விநாயகர் சதூர்த்தியை முன்னிடடு, கர்ம வினைகள் தீரவும், காரியங்கள் சித்தி பெறவும், பிராத்தனைகள் நடைபெறவும் மகாகணபதி ஹோமம், நடைபெற்றது..

இலைகளின் பெயர்கள்

முல்லை இலை, கரிசலாங்கண்ணி இலை, வில்வம் இலை, அருகம்புல், இலந்தை இலை, ஊமத்தை இலை, வன்னி இலை, நாயுருவி , கண்டங்கத்தரி, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, விஷ்ணுகிராந்தி இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து இலை, அரசம் இலை, ஜாதிமல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை, தவனம் இலை, தும்பை இலை, குண்டுமணி இலை ஆகும்.​

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images