வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வருகிற 02.09.2019 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணிக்குள்ளாக 108 கணபதிகளை வழிபடும் விதமாக 108 கணபதி ஹோமமும் ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தன்வந்திரி ஹோமத்துடன் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி விநாயகர் :
உலகில் வேறெங்கும் இல்லாதவாறு மக்கள் அதிசயிக்கும் வகையில் கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் முகப்பை நோக்கி நடந்து வந்தால், பீடத்தின் முன் நமக்கு காட்சி தருவது ஒரே கல்லால் செய்யப்பட்ட வினை தீர்க்கும் விநாயகரும், பிணி தீர்க்கும் தன்வந்திரி பகவானும். இருவரும் ஏக தரிசனத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுக்கின்றனர்.
வினை தீர்க்கும் விநாயகர் சங்கு சக்கரத்துடன் தும்பிக்கையில் அம்ருத கலசத்துடன் வைஷ்ணவ சம்பிரதாயப்படி திருமண் முத்திரை தரித்து சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கின்றார். வினைகளுக்கு ராஜாவான விநாயகரும் பிணிகளுக்கு ராஜாவான தன்வந்திரி பகவானும் ராஜ அம்சமாக சிம்மாசனத்தில் வீற்றிருந்து அண்டி வருவோரின் தீவினைகளையும் பிணியையும் தீர்த்து அருள்பாலிக்கின்றனர்.
இந்தச் சந்நிதியில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்துடன் திருவோணம் மற்றும் பக்தர்களின் ஜென்ம நக்ஷத்திர நாட்களில் கர்ம வினைகள் நீங்க பக்தர்கள் தங்கள் கைகளாலேயே தைலக்காப்பு திருமஞ்சனம் செய்து வழிபடுகின்றனர். உடலில் ஏற்படும் சொறி, சிரங்கு ஆகிய தோல் வியாதிகளுக்கும், சர்க்கரை நோய், புற்று நோய் போன்ற கொடிய ஆட்கொல்லி நோய்களுக்கும், இதர வியாதிகளுக்கும் இந்தத் தைலம் விசேஷப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
மேலும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவராக இங்கு வீற்றிருக்கிறார். இங்கு வாஞ்சா கல்பலதா கணபதி ஹோமம், மகா கணபதி ஹோமம், தன்வந்திரி கணபதி போன்ற ஹோமங்கள் சிறப்பாக நடத்தபடுக்கின்றன. இவர் கர்ம வினை நோய் தீர்க்கும் மருத்துவராகவும், கர்ம பிணி தீர்க்கும் மருத்துவராகவும் திகழ்கிறார். இவரை விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட்டு, கர்ம வினை நீங்கி, உடல் பிணி தீர்ந்து மனநலம் பெற்று வாழலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சன்னதியில் தன்வந்திரி ஹோமத்துடன் 108 கணபதி ஹோமம் விநாயக சதுர்த்தி நாளில் நடைபெற உள்ளது.
விநாயக சதுர்த்தி
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் வரும் நாளே விநாயக சதுர்த்தியாகும். விநாயக பெருமானுக்கு பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர்,கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு உள்ளது. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும்.
108 கணபதி ஹோமம் :
மஹா கணபதி, மஹா கர்ண கணபதி, மஹா சக்தி கணபதி, சர்வ சக்தி கணபதி, நித்ய கணபதி, நிமல கணபதி,நித்யானந்த கணபதி, நாத கணபதி, நாகேஸ்வர கணபதி, நவ நதிய கணபதி, சித்து கணபதி, ஷ்யாமள கணபதி,சிங்கார கணபதி, சிவசக்தி சந்தான கணபதி, வினோத கணபதி, விஷேட கணபதி, சாத்வீக கணபதி, சதானந்தகணபதி, சுமூக கணபதி, சுத்த ஷ்யாமள கணபதி, சுத்த சிவமய கணபதி, சுந்தர கணபதி, மஹா காவ்ய கணபதி,ஜ்வாலா கணபதி, ஜோதி கணபதி, ஜோதி ஆனந்த கணபதி, சங்கர கணபதி, ஆனந்த கணப்தி, ஆரோக்ய கணபதி,முத்து கணபதி, முக்தி கணபதி, முக்தி யோக கணபதி, இச்சா கணபதி, இமாச்சல கணபதி, இந்திர கணபதி, வித்யாகணபதி, விமல கணபதி, உச்ச கணப்தி, உச்சிஷ்ட கணபதி, உகார கணபதி, ஈசான கணபதி, ஈசானந்த கணபதி,ஊர்மிள கணபதி, யந்திர கணபதி, ஏகானந்த கணபதி, ஐக்கிய கணபதி, ஐஸ்வர்ய கணபதி, ஹோம கணபதி,ஓங்கார கணபதி, ஔஷத கணபதி, கர்ண கணபதி, கந்பக கணபதி, ஞான கணபதி, ஞான சக்தி கணபதி, சதாசிவகணபதி, சங்கல்ப கணபதி, கன்ன கர்ண கணபதி, டம்ப கணபதி, நாத கணபதி, நவ நதிய கணபதி, தபோநந்தகணபதி, தபசு கணபதி, தர்க்க ஜெய கணபதி, பவித்ர பத்ம கணபதி, மகார கணபதி, யாக கணபதி, யாக சக்திகணபதி, ரத கணபதி, ராக கணபதி, லலிதா கணபதி, லவண கணபதி, வஜ்ர கணபதி, வசீகர கணபதி, நாத கணபதி,நாதாம்ச கணபதி, யோக கணபதி, யோக மஹா சக்தி கணபதி, ஞான நித்ய கணபதி, கமல கணபதி, ஷ்ராவணகணபதி, சித்த கணபதி, சித்து புத்தி கணபதி, கல்ப கணபதி, வித்தக கணபதி, லக்ஷ்மி கணபதி, சிந்து கணபதி,முக்தி கணபதி, சகஸ்ரார கணபதி, வினோத கணபதி, வில்லங்க நிவாரண கணபதி, அஷ்ட சித்து கணபதி, அஷ்டஐஸ்வர்ய கணபதி, அட்ஷய கணபதி, இடா கணபதி, இடா பிங்கள கணபதி, இடா பிங்கள சூட்ஷம கணபதி,ப்ரணவ கணபதி, ப்ரம்ம குண்டலினி கணபதி, விஷ்ணு கணபதி, சிவ கணபதி, ஆதி சக்தி கணபதி, ஆதார கணபதி,ப்ரணயாம சக்தி கணபதி, ப்ரகாச கணபதி, விக்னேஷ்வர கணபதி, வினோத கணபதி, சர்வ ஜெய கணபதி, சர்வஜெய விஜய கணபதி.
மேற்கண்ட 108 கணபதியை வேண்டி 108 கணபதி ஹோமம் மாபெரும் ஹோமகுண்டத்தில் ஷண்மத ஆச்சாரியர்களை கொண்டு விநாயக சதுர்த்தியன்று நடைபெற உள்ளது. இந்த யாகத்தில் அஷ்ட திரவியங்கள், அறுகம்புல், தேன், நெய், விலை உயர்ந்த மூலிகைகள், பிணி தீர்க்கும் திரவியங்கள், பட்டு வஸ்திரங்கள், மோதகங்கள், பல வகையான புஷ்பங்கள், பழங்கள், நவதான்யங்கள், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட உள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெறும் 108 கணபதி ஹோமத்தில் சிரத்தையுடன் பங்கேற்பவர்களுக்கு மஹா கணபதியின் பேரருளால் கர்ம விநைகள் நீங்கி சிறந்த கல்வி அறிவும், தெளிந்த ஞானமும், சிறந்த செல்வமும், பிள்ளைப் பேறும் துன்பங்கள் விலகி இன்பமும் பெறுவார்கள். சகல காரிய அனுகூலமும் உண்டாகும், இடையூறுகள் விலகும், பேரும் புகழும் கிடைக்கும், சகல நோய்களும் நீங்கி, சகல பாக்கியங்களுடன் வாழும் நிலையை பெறலாம். மேலும் பக்தர்களுக்கு பலவகை நர்பலன்கள் கிடைக்கும் என்கிறார் பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.