World Purohith Welfare Homam

அகில உலக புரோகிதர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலன் கருதி 8 ஆம் ஆண்டு சிறப்பு தன்வந்திரி யக்ஞம் வருகிற 16.11.2017 வியாழக்கிழமை காலை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அவர்களின் ஆசிகளுடன் கீழ்கண்ட நிகழ்ச்சி நிழல் படி நடைபெறுகிறது.

ஸ்ரீ வேத வ்யாசரின் திருவருளாலும் மற்றும் மகான்களின் ஆனுக்ரஹத்தாலும் சிறப்பாக பணியாற்றும் புரோகிதர்கள் குடும்பத்தில் வரப்போகும் சுப/அசுப நிகழ்ச்சிகளுக்கு பலன்களை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்குண்டான பரிகாரங்களைச் சொல்லி பூஜைகள் செய்து க்ஷேமங்களை உண்டு பண்ணுவதே புரோகிதர்களின் பணியாகும். ராஜாக்கள், மந்திரிகளைவிட புரோகிதர்களை நன்கு மதித்து கௌரவிக்க வேண்டியது ஓவ்வொரு மனிதனின் தலையாய கடமையாகும்.

நேரம், காலம் என்று பார்க்காமல் தங்கள் குடும்பம், குழந்தை என்று பார்க்காமல் அவர்கள் குடும்பத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மக்களின் சேவையே மகேசன் சேவை என்ற முறையில் ஜாதி, இன, மொழி பேதமின்றி மற்றவர்களின் குடும்பத்தில் நடைபெறும் சுப/ அசுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று புரோகிதப்பணி செய்து வருகிறார்கள். இப்படிப் பட்டவர்களின் வாழ்விலும் சில பிரச்னைகள், சில வியாதிகள், பலவிதமான தடைகள், மனச்சஞ்சலங்கள், கருத்து வேறுபாடுகள், பணப் பிரச்சனைகள், மன உபாதைகள், மனப் போராட்டங்கள் நிகழ்கின்றன. இத்தகைய கஷ்டங்களை மனதில் கொண்டு பிரதி வருடமும் நவம்பர் மாதம் 16ம் தேதி வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் அகில உலக புரோகிதர்கள் மற்றும் ஆவர்கள் குடும்பங்களின் நலன் கருதி சிறப்பு தன்வந்திரி யக்ஞம் நடைபெறுகிறது.

புரோகிதர்களுடைய க்ஷேமம், குடும்ப க்ஷேமம், அவர்களைச் சார்ந்தவர்களின் க்ஷேமத்திற்காக இந்தாண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் வருகிற 16.11.2017 வியாழக் கிழமை காலை 6.00 மணி முதல் விசேஷமான முறையில் பூர்வாங்க பூஜை மற்றும் யக்ஞங்கள், தென்னிந்திய புரோகிதர்கள் சங்கத்தின் நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெறுகிறது. அவ்வமையம் உலக புரோகிதர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயன்பெறும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

16.11.2017 வியாழக் கிழமை

குறிப்பு: யக்ஞத்தில் கலந்து கொள்ளும் அனைவரும் அவரவர் ஸம்பிரதாயப்படி (வைதீக முறையில்) வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். செல்போன், புகைப்படம், விடியோ கருவிகள் யக்ஞத்தின் போது பயன்படுத்த வேண்டாம். யக்ஞம் மற்றும் பூஜை, அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் ஆண்கள் வரை சட்டை, பனியன் அணிய அனுமதி இல்லை.

பஸ் மார்க்கம் : சென்னை to வேலூர்

வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சோளிங்கர் சாலையில் 3 கி.மீ தூரத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்திரி ஆரோக்ய பீடம் அமைந்துள்ளது.

ரயில் மார்க்கம் : சென்னை to காட்பாடி மார்க்கத்தில் வாலாஜா ரோடு சந்திப்பில் அல்லது காட்பாடி சந்திப்பில் இறங்கி, வாலாஜாபேட்டை Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images