வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 11.11.2017 சனிக்கிழமை காலாஷ்டமியை முன்னிட்டு ஸ்வணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் மற்றும் மஹா பைரவருக்கு விசேஷ பூஜைகளும், மஹா ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், காலபைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பலவகையான பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். அதில் காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நம்பிக்கையுடன் செய்து வருகிறோம்.
தன்வந்திரி பீடத்தில் அஷ்ட பைரவருடன் மஹா காலபைரவர். வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் பீடாதிபதி கயிலைஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் இந்தியாவில் எங்கும் இல்லாதவாறு ஒரே கல்லில் பல சிறப்புகள் கொண்ட சொர்ண பைரவருக்கும், ஒரு கல்லில் மஹா பைரவரும் ஆதார பீடத்தில் அசிதாங்க பைரவர், சம்ஹார பைரவர், ருரு பைரவர், க்ரோதன பைரவர், சண்ட பைரவர், கபால பைரவர், ருத்ர பைரவர், உன்மத்த பைரவர் என எட்டுத் திருநாமங்கள் கொண்டஅஷ்ட பைரவர்களை திசைக்கு இரண்டு பைரவர் வீதம் பிரதிஷ்டை செய்து ஆண்டுதோறும் 74 பைரவர் ஹோமங்கள், 64 பைரவர் ஹோமங்கள், தச பைரவர் ஹோமங்கள், அஷ்ட பைரவர் ஹோமம் போன்ற பல ஹோமங்களும் சிறப்பு பூஜைகளும் பக்தர்கள் நலனுக்காகவும் உலக நலனுக்காகவும் ஸ்வாமிகள் தன்வந்திரி பீடத்தில் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.
பைரவர் காலாஷ்டமியை முன்னிட்டு 10.11.2017 வெள்ளிக்கிழமை நேற்று, இன்று 11.11.2017 சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கால பைரவர் அருள் கிடைக்கவும் பிதுர் தோஷம், திருமணத்தடை விலகவும், வியாபாரம் செழிக்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையேஒற்றுமை அதிகரிக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெற, செல்வச் செழிப்பு ஏற்பட, சனிபகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க,பிரம்மஹத்தி தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, பில்லி, சூன்யம், திருஷ்டி அகல, அக்கம்பக்கத்தவர்களின் தொல்லைகள் அகல, யமபயம் நீங்க,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், தச பைரவர்களுக்கு யாகங்கங்களும், அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டு பைரவர்களை தரிசித்தனர்.
தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு , ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷணபைரவரின் பிரசாதங்களாக வழங்கப்பட்டது. வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய விரும்பும் ஒவ்வொரு பக்தரும் வாழ்வில் இந்த பைரவரை தரிசித்து,பிரசாதங்கள் பெற்று ஆனந்தமான வாழ்வு வாழலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
INR Rs. 0/-
Book now